Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

Periyava

Courtesy:Geetha Jayaram, Chennai

பெரியவாளைக் கட்டியிழுத்த பகவந்நாமம்!

1977-ல் தேனம்பாக்கத்தில் இருந்த பெரியவா, தினமும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ஸன்னதியின் மாடவீதிகளில் ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு வருவார்.

வடக்கு மாடவீதியில் இருந்த ஒரு வைஷ்ணவ குடும்பம், பெரியவாளிடம் அபார பக்தி கொண்டது. பெரியவா குள்ள உருவமாக இருந்தாலும், அவருடைய நடைக்கு ஈடு குடுக்க யாராலும் முடியாது!

ஒருநாள் அம்மாதிரி பெரியவா வேகமாக நடந்து கோவிலை ப்ரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு வடக்கு மாடவீதிக்குள் நுழைந்ததும், சற்றும் எதிர்பாராமல் அந்த வைஷ்ணவ பக்தரின் க்ருஹத்தின் வாஸலில் வந்து நின்று கொண்டார்.

கண்களை மூடிக் கொண்டு அப்படியே சிலை போல் நின்று கொண்டிருந்தார். பிறகு வீட்டுக்குள் நன்றாக உற்று நோக்கினார்.

அதற்குள், பெரியவா வாஸலில் வந்து நின்று கொண்டிருப்பதை கண்டதும், உள்ளே இருந்து மொத்த குடும்பமும் வெளியே ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்கள். எல்லாருக்கும் உள்ளே ஒரே ஒரு கேள்விதான்!

“தெனோமும் நம்மாத்து வழியாப் போற பெரியவா, இன்னிக்கி மட்டும் வாஸல்ல நின்னு, கண்ணை மூடிண்டு த்யானம் பண்ணிட்டு, ஆத்து உள்ளுக்குள்ள வேற தீர்க்கமா ஏன் பாத்துட்டுப் போனார்?…”

அதற்கான விடை அன்று இரவே தெரிந்தது!

அந்த குடும்பத்தின் வயஸான தகப்பனார் அன்றிரவு அனாயாஸமாக விஷ்ணுபதம் அடைந்தார்!

அவருக்கு கண் தெரியாது!

ஸதா விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் மட்டுமே பண்ணிக் கொண்டிருப்பார். யானைக்கட்டித் தெருவில் உள்ள சங்கர மடத்தில் ஸாயங்காலம் நடக்கும் கோபூஜைக்கும், கஜபூஜைக்கும் நாள் தவறாமல் போவார்.

வேறு எந்த பெரிய ஸாதனையும் பண்ணவில்லை! அவஸ்யமுமில்லை!

ஸதா நாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்த தன் பக்தனை, பகவானே அவருடைய வீடு தேடி வந்து, வாஸலில் நின்று, தன்னுடன் எடுத்துக் கொண்டு போய்விட்டான்!

வேறென்ன வேண்டும்?

என்ன பாக்யம்!

Compiled & penned by Gowri Sukumar.

பூகோள ஞானம்

“பெரியவாளின் குழந்தைத் தன்மையும் பூகோள ஞானமும்”

ஸ்வாரஸ்ய சம்பாஷணை (ஒரு பகுதி)

( இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு.அதைச் சுற்றி எத்தனை முஸ்லீம் தேசங்கள் இருக்கின்றன? இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா?”)

சொன்னவர்-எஸ்.மீனாட்சிசுந்தரம்

தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

(1971-கார்வேட்-சித்தூர் மாவட்ட காம்ப்)

எங்கள் வீட்டில் பெரியவாளைத் தங்கும்படி நான் வேண்டியவுடன் பெரியவர்கள் சொன்னார்கள்;

“இந்த ஊரில் புதிதாக வீடு கட்டி குடித்தனம் வராமல் இருக்கும் வீடு ஏதாவது இருந்தால் சொல்லு. அங்கு நான் தங்கிக் கொள்கிறேன்.”

உடனே என் நண்பர் முதலியாரின் வீடு ஞாபகத்துக்கு வந்தது.(வீட்டிற்குப் பின்னால்) “இருக்கிறது”

“நான் அங்கேயே தங்குகிறேன்,”

முதலியார் அவர்கள் மகாபெரியவாள் மீது வைத்திருந்த அத்தியந்த பக்தி அந்த மகானை அவருடைடைய வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டது.

முதலியார் புளகாங்கிதமடைந்தார். சுவாமிகள் புது வீட்டுக்கு வந்து அறையில் வைக்கோல் பரப்பச் செய்து அதில் சிரமபரிகாரம் செய்யத் தொடங்கினார்.

ஊர்மக்கள் வெகு ஆவலுடன் பெரியவாளைப் பார்க்க திரண்டனர். பெரியவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஆரவாரமின்றி வரிசையாக மக்களை நிற்க வைத்து சுவாமிகளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார், அப்பகுதி எம்.எல்.ஏ.ஸ்ரீ தியாகராஜன் அவர்கள்.

அடுத்தநாள் விடியற்காலை நாலு மணி இருக்கும். கிணற்றடியில் சத்தம் கேட்டது.எங்கள் வீட்டுப் பின்புறம் உள்ள கிணற்றில் மகாபெரியவாள் தன்னுடைய மரத்திலான பாத்திரத்தைக் கொண்டு தண்ணீர் நிறைத்துக் கொண்டிருந்தார்கள்.

உடனே நான் அருகில் சென்றேன்.

“இதோ பார்த்தாயா…இந்த மரச்செம்பு உடைந்திருக்கிறது கையைக் கிழிக்கிறது..” குழந்தை மாதிரி பேசிக்கொண்டிருந்தார்.

பின் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். “கிழக்கு வங்காள ரேடியோவில் தினமும் பகவத்கீதை வைக்கிறாளாமே…உனக்குத் தெரியுமோ?”

நான் சொன்னேன்,”இந்துக்களுக்குப் பாதுகாப்புக் குறைவாக இருக்கிறது. மற்ற மதங்கள்,முக்கியமாக இஸ்லாமும்,கிறிஸ்துவமும் உலகம் பூரா பரவியிருக்கிறது.அவர்களுக்கு ஒரு நாட்டில் கஷ்டம் என்றால் மற்ற நாட்டிலுள்ளவர்கள் உதவ முன் வருகிறார்கள்.இந்துக்கள் மாத்திரம் பயந்துகொண்டே தான் வாழ வேண்டியிருக்கிறது”

“அப்படியா? இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு.அதைச் சுற்றி எத்தனை முஸ்லீம் தேசங்கள் இருக்கின்றன? இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா?”

நான் பிரமிப்பின் எல்லைக்கே போய்விட்டேன். ஆசிரியரான எனக்கு,இவ்வளவு துல்லியமான பூகோள ஞானம் கிடையாது என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மகா பெரியவாளின் பரந்த அறிவையும் மனோ தைரியத்தையும் வியந்து என் அறியாமையை நினைத்து வெட்கப்பட்டேன்.

காலையில் ஓர் உதவி ஆசிரியரை திருப்பதிக்கு அனுப்பி புதிதாகக் கமண்டலு முதலிய மரப்பாத்திரங்களை வாங்கிவரச் செய்தேன்.

அன்று மாலை புதுப்பாத்திரங்களைப் பெற்றுக்கொண்டு ரொம்ப சந்தோஷப்பட்டு, ” என்ன வழவழப்பாக இருக்கிறது…” என்று ஒரு குழந்தை எவ்வாறு புது விளையாட்டு பொம்மையை வாங்கி ஆனந்தமடையுமோ அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்திக் காட்டினார்.

மகா பாக்கியம்

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants